”அய்யப்பனும் கோஷியும்” படத்தில் நடித்த நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழப்பு

Must read

கொச்சி: 
ய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, மலங்கர அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் காமாட்டிபாதம் பாவாடா உள்ளிட்டப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் நெடுமங்காடு. இவர் இன்று தோடுபுழாவில் உள்ள மலங்கர அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அங்கு அவர் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து அவரை மீட்டவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரது உடலானது தோடுபுழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


ஜோசப் பட நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் படத்திற்காக தோடுபுழா சென்றது குறிப்பிடத்தக்கது. இவரது உயிரிழப்புக்கு மலையாள திரைக்கலைஞர்கள் பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article