டில்லி:
மோடி அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
மோடி அரசு தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்’ என மத்திய அரசு 2018 – 19ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் என்று பிரபலப்படுத்தப் பட்டது.
இந்த நிலையில், தற்போது பாஜக அரசு ரூ.50 கோடி மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பலன் அடைந்துள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளது.
ஆனால், ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் இதுவரை குறைந்த அளவிலேயே மருத்துவ சிகிச்சைக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை என்பது எப்படி சாத்தியம்…. என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
பாஜக அரசு ஒருகோடி பேருக்கு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.