சென்னை: தமிழ்நாட்டில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ உள்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல்  இன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ மற்றும் நேச்சுரோபதி உள்பட ஆயுஷ் படிப்புகளுக்காக  அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே  வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று  தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 4,092 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.