சென்னை,

மிழகத்தில் 10 மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபத் நாயக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 இடங்களில்  சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி சிகிக்கை முறைகளை அளிக்கும் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

விரைவில் இந்த இடங்களில் ஆயுஷ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்து உள்ளார்.