
வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம், இன்று (மே 10) வெளியீடாக இருந்தது.
ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
சிக்கலின்றி வெளிக் கொண்டுவர இன்று மதியம் முதலே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒருவழியாக சமரசம் ஏற்பட்டு நாளை (மே 11) வெளியாகும் என தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel