அயோத்தி:
அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் தீப உற்சவ விழாவில் நேற்று 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு களித்தனர்.
அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த புதிய சாதனையை அடைய முக்கியப் பங்கு வகித்தனர்.
பிரதமர் மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயூ நதிக்கரைகளில் ஏற்றி வைக்கப்பட்டன.
Patrikai.com official YouTube Channel