சென்னை:
நாடே எதிர்பார்க்கும் அயோத்தி சர்ச்சைக்குரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்திற்கு உள்ளே வாகனங்கள் காவல்துறை தடை விதித்து உள்ளது.
உ.பி.யில் உள்ள ராமஜென்மபூமி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழகின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. உ.பி. மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அயோத்தி வழக்கு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யாரும் பேசக்கூடாது என்று பாஜக வினருக்கு உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உ.பி. மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சமூக வலைதளங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்திலும் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளான விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையம், சுற்றுலா ஸ்தலங்கள் உள்பட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வரும், தலைமை செயலகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன் ஒருபகுதியாக இன்று முதல் வரும் 13.ம் தேதி வரை, தலைமைச் செயலகத்திற்குள் எந்தவித வாகனங்களும் நிறுத்த (பார்க்கிங்) அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.