புதுடெல்லி:

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றம் நாளை வியாழக்கிழமை தீர்ப்பளிக்கிறது.


அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

கடந்த 26-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி நில உரிமை தொடர்பாக மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இது குறித்த தீர்ப்பை நாளை அளிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.