IPL 2016 இன்றைய போட்டியில், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியை விஜயின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
தொடர் தோல்விகளால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தடுமாறிவந்த அணியின் தலைமையை முரளி விஜய்யிடம் ஒப்படைத்துள்ளது இந்த மற்றம் ராசியாக அமைந்தது.
களமிறங்கிய பஞ்சாப் கேப்டன் விஜய் ஒரு புறம் விளையாட மறுபுறம் விக்கெட்கள் சரியா கிங்ஸ் அணிக்கு ரன்கள் எடுக்க தடுமாற்றம் ஏற்பட்டது. விஜய் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சகா மற்றும் மில்லர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோர 19.5 ஓவரில் 10 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் எடுக்க உதவினார். குஜராத் அணியின் இளம் மர்ம பெலிங் வீரர் ஷிவில் கவுசிக் 3 விக்கெட் எடுத்தார்.
PhotoGrid_1462123629045
155 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற களமிறங்கிய குஜராத் ஆரம்பம மோசமாக இருந்தது. மோஹித் சர்மாவின் பெலிங்கில் இரண்டு விக்கெட் அடுத்து அடுத்து இலக்க குஜராத் அணி ரன்கள் எடுக்க தடுமாறினார். பஞ்சாப் அணியின் அக்ஸார் படேல் ஒரே ஓவரில் குஜராத் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்மித், கார்த்திக் மற்றும் பிராவோ ஹாட்ரிக் பந்துகளில் அவுட் செய்தார்.
அடுத்த வந்த குஜராத் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் மட்டுமே குஜராத் அணி எடுத்து. 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.