vijay-sethupathi-tamannah-873ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைவரின் பேராதரவுடன் வணிக நீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன.
நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக’ தர்மதுரை ‘திரைப்படம் 4 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படம்’ தர்மதுரை’- தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்
சிறந்த இயக்குநர் – சீனு ராமசாமி
சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி
சிறந்த நடிகை -தமன்னா என நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது.
இந்நிகழ்வில் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மோகன்லால், நிவின் பாலி,சிறந்த நடிகர்கள்,இயக்குநர் பிரியதர்ஷன் சிறந்த இயக்குநர் (மலையாளம்) உள்ளிட்ட பல முன்னனணி நட்சத்திரங்களும் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். ‘தர்மதுரை’க் கான விருதுகளில் சிறந்த தயாரிப்பாளர் விருது மட்டுமல்ல ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘மருது’ படங்களில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும் சுரேஷ் பெறுகிறார்.
இது பற்றி ஸ்டுடியோ 9. ஆர்.கே. சுரேஷ் பேசும் போது :-
“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘தர்மதுரை’ படம் நல்ல கதையம்சம் உள்ள படம் மட்டுமல்ல, நல்ல சமூகக் கருத்துகள் சொன்ன படமும் கூட. எனக்கு படம் வசூல், வெற்றி சம்பந்தமான செய்திகள் வர ஆரம்பித்தபோதே படம் சொன்ன சமுதாய கருத்துகள் பற்றியும் பாராட்டுகள் வந்து கொண்டே இருந்தன.
மக்கள் பாராட்டுகள் ஒருபுறம் இன்னொரு புறம் சூப்பர் ஸ்டார் முதல் நட்சத்திரங்களின் பாராட்டுகள் குவிந்து கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக வியப்பளிக்கும் விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் படம் பார்த்துப் பாராட்டியது மறக்க முடியாதது. நல்லக் கண்ணு ஐயா முதல் மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் போன்ற தலைவர்கள் சினிமா பற்றி விமர்சனம் செய்பவர்கள், மாற்றுக்கருத்துடைய தலைவர்கள் கூட படத்தைப் பாராட்டியது மறக்க முடியாது. சினிமா பக்கமே போகாத மு.க.ஸ்டாலின் அவர்கள் படம் பார்த்து நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதியது பெரிய வியப்பான விஷயம்.

ஆர்.கே.சுரேஷ்
                        ஆர்.கே.சுரேஷ்

‘தர்மதுரை யைப் பொறுத்தவரை பலரும் விஜய் சேதுபதி நடிப்பில்புதிய பரிமாணம் எடுத்திருந்ததைக் கு றிப்பிட்டுப் பாராட்டினார்கள். மக்கா கலங்குதப்பா பாடல் உலகம் முழுக்க கலக்கியது . நான் முதலில் தயாரித்த’ சலீம்’ படமும் சமுதாயக் கருத்து சொன்ன படம்தான். ‘தர்மதுரை ‘ அவ்வகையில் அடுத்த படம். இவ்வளவு பாராட்டுக்கும் பிறகு ஆசியா விஷன் விருது போன்ற விருதுகளும் வருகின்றன. ஷார்ஜாவில் 18 ஆம் தேதி தனிப்பட்ட முறையில் நான் தயாரிப்பாளர், வில்லன் நடிகர் என இரு விருதுகளைப் பெறவுள்ளேன். அதே துபாயில் அடுத்த சில நாட்களில் 24 ஆம் தேதி அபிராமி மெகா மால் நடத்தும் ‘அபிராமி விருது ‘விழா நடக்கவுள்ளது. துபாய் அமைப்பு துணையுடன் இந்த விழா நடக்கிறது.
முதல் விழாவுக்குச் செல்கிற நான் இன்னொரு விழாவுக்கு இடையில் தமிழகம் வந்து விட்டுச் செல்ல வேண்டும். இங்கு உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.. ” என்கிற சுரேஷ். தான் அடுத்து நடித்து வரும் படங்கள் பற்றிப் பேசும் போது
” நான் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘தனி முகம்’ படப்பிடிப்பு பாதியளவு முடிந்து விட்டது. அடுத்து ‘பில்லா பாண்டி’ படத்தில் இயக்குநர் ராஜ் சேதுபதி இயக்கத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன். இப்படத்தில் என்னுடன் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். மோனல் கஜார் ஒருவர். இன்னொருவர் புதுமுகம். இதன் தயாரிப்புப் பணியை இன்னொருவருடன் இணைந்து செய்கிறேன். ” என்கிற சுரேஷின் முகத்தில ஆயிரம் வாட்ஸ் விளக்கு வெளிச்சம் பரவுகிறது.
வில்லன் நடிகர் நாயகனாகி பதவி உயர்வு பெற்று அவருக்கு இரண்டு நடிகைகள் ஜோடி என்றால் வெளிச்சம் பரவாதா என்ன?