சென்னை: 2018-19, 2019-20ம் ஆண்டுகளுக்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட  21 எழுத்தாளர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில்  விருது வழங்கி கவுரவித்தார் தமிழ்நாடு  முதல்வர் முக ஸ்டாலின்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழகியுள்ளார்.

2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அத்துடன்  ரூ.20,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்பட 21எழுத்தாளர்கள் இந்த விருதை பெற்றுக்கொண்டனர்.