தமிழ் அறிஞர் அவ்வை நடராசன் வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்களுக்கு
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் ஆணை#CMMKStalin #TNDIPR @CMOTamilnadu @tnpoliceoffl @mp_saminathan pic.twitter.com/UFNTLXVRM8— TN DIPR (@TNDIPRNEWS) November 22, 2022
அவ்வை நடராசனின் தமிழ் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தமிழ் ஆசிரியராக பணியாற்றிவந்த தமிழறிஞரான அவ்வை துரைசாமி பிள்ளைக்கு 1936 ம் ஆண்டு மகனாக பிறந்தார் நடராசன்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1958 ம் ஆண்டு தமிழ் மொழி ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனது பூர்வீகமான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த அவ்வையார்குப்பம் என்பதை குறிக்கும் விதமாக தனது பெயருக்கு முன் ‘அவ்வை’ என்பதை இணைத்துக் கொண்ட அவ்வை நடராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டார்.
2011ம் ஆண்டு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் துணை தலைவராகவும் இருந்த அவ்வை நடராஜனின் மகன்களில் ஒருவரான ந. அருள், தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனராக உள்ளார். இவரது மற்ற இரண்டு மகன்கள் கண்ணன் மற்றும் பரதன் ஆகியோர் மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர்.
அவ்வை நடராசனின் மனைவி மருத்துவர் தாரா நடராஜன் 2020 ம் ஆண்டு காலமானார். மறைந்த நடராசனின் உடல் மைலாப்பூரில் இன்று தகனம் செய்யப்படுகிறது.