சென்னை
பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ. 15000 இழந்துள்ளார்.

பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு உடனடியாக ரூ.15,000 வேண்டும் என்று கேட்டிருந்தார்.
பணத்தை அனுப்புவதற்காக ஒரு வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பினார். அதை சோதனை செய்து பார்க்காமல் நானும் பணத்தை அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகு யோகேந்தர் என வேறு ஒரு நபரின் பெயரை காட்டியது.
இதனால் சந்தேகமடைந்து எனது நண்பரை தொடர்ந்து கொண்டு கேட்டபோது, தனது வாட்ஸ்அப் கணக்கை யாரோ முடக்கிவிட்டார்கள். அவரது எண்ணில் இருந்து இதே போல் பலருக்கு குறுஞ்செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலர் பணத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனவே, இதுபோல் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால், பணத்தை அனுப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.