தராபாத்

பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அள்த்துள்ளனர்.

கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டன. 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு இருந்த வீடுகள் மண்ணால் மூடப்பட்டு 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில் சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு ராணுவக் குழுக்கள் 500க்கும் மேற்பட்ட வீரர்களுடன், சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கத்து மாநில அரசுகள் , சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் ஆகியோர் ரூ.1கோடி வழங்கியுள்ளனர்

[youtube-feed feed=1]