மெய்யப்ப செட்டியாரால் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஏவிஎம் சினிமா தயாரிப்பு நிறுவனம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் 350க்கும் அதிகமான படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளது இந்நிறுவனம்.

ஏவிஎம் மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அவரது மகன் ஏவிஎம் சரவணன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்ககளுக்கு முன்பு கதாநாயகர்கள் அதிகமாக சம்பளம் கேட்பதால் சமாளிக்க இயலவில்லை. இப்போதுள்ள கதாநாயகர்களுக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக்கொண்டு சினிமாவுக்கு வருகிறேன், அதுவரை சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறியிருந்தார் சரவணன்.

இந்நிலையில் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது ஏவிஎம் நிறுவனம். ஆனால், இந்த முறை ஓடிடி தளத்தில் களமிறங்க உள்ளது ஏவிஎம் நிறுவனம். சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.