கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் நிலை எப்படியிருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதனிடையே, சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா உள்ளிட்ட திரையரங்குகள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிக்கப்படவுள்ளது. தற்போது ஏவிஎம் வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏவிஎம் கார்டனும் திருமண மண்டபமாக மாறவுள்ளது. ஏற்கெனவே, ஏவிஎம் வளாகத்தில் ஒரு பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பகுதி மருத்துவமனை என்று மாறிவிட்டது.

இந்நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ள தகவல், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.