விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வருவதை அடுத்து விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை விமானங்களுக்கான எரிபொருளை விற்பனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

விமான எரிபொருள் விலை பொதுவாக மாதத்தின் முதல் நாளில் நிர்ணயிக்கப்படும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த எரிபொருள் விலை குறைந்திருந்தது.

கடந்த மாதம் விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் ரூ.2,941 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் கிலோ லிட்டருக்கு ரூ.1,318 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ரூ.91,856.84 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.85,861.02 ஆகவும், மும்பை மற்றும் சென்னையில் ரூ.95,231.49 ஆகவும் உள்ளது.

விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டுமாதங்களாக அதிகரித்து வருவதை அடுத்து விமான கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.