மும்பை
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஒன்றுக்கு பட்டப்படிப்பு வரை படிக்கவைக்க சுமார் 12.22 லட்சம் ரூபாய்கள் செலவு செய்கிறார்கள் என கண்டறியப்பட்டது.
உலகெங்கும் உள்ள நாடுகளில் குழந்தைகளுக்கு ஆகும் கல்விச்செலவைப் பற்றிய கணக்கெடுப்பு ஒன்று சர்வதேச நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. அதன்படி இந்தியப் பெற்றோர்கள் தன் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 12.22 லட்சம் ரூபாய் பட்டப்படிப்பு வரை படிக்க செலவு செய்கிறார்கள் எனவும் முன்பு இருந்ததை விட இது பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறி உள்ளது.
ஆனால் அதே கணக்கெடுப்பில் பல நாடுகளில் கல்விச்செலவு நம்மை விட அதிகம் என்பதையும் குறிப்பிட்டு நமக்கு சிறிது நிம்மதி ஊட்டுகிறது. ஆம். உலகத்தின் மொத்த நாடுகளில் சராசர் கல்வித்தொகை யு எஸ் டாலர் கணக்கில் 44,221 ஆகிறது, ஆனால் இந்தியாவில் 18.909 தான் ஆகிறது.
மொத்தம் கணக்கெடுக்கப்பட்ட 15 நாடுகளில் இந்தியா 13 ஆவது இடத்தை பிடித்துள்ளது. எகிப்தில் 16863 டாலரும், ஃபிரான்ஸில் 16708 டாலரும் தான் சராசரி கல்விச் செலவு ஆகிறது.