சென்னை

ழைக்குடும்பத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி மேயர் ஆகிறார்.

 

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி உதயகுமார் ஆவடி 9 ஆம் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.  இவர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார்.  இவர் திருமுல்லைவாயில் காலனி திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது தந்தை குணசேகரன் பாதுகாப்புத்துறை ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.  இவரது மனைவி விநாயகி.  இவர்களுக்கு ஜெய் ஆதித்யா என்னும் 4 வயது மகன் உள்ளார்.  இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்  இவர் குடும்பமே ஒரு திமுக குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆவடி மாநகராட்சி மேயராக இவரை திமுக அறிவித்ததுள்ளது.   இவர் அறிவிப்பு வெளியான உடன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  மேலும் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினருமான சா மு நாசரிடமும் வாழ்த்துப் பெற்றுள்ளார்.

ஆவடி மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக மதிமுக உறுப்பினர் எஸ் சூரியகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவர் இந்த  அறிவிப்பைத் தொடர்ந்து மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர், மதிமுக தேர்தல் பணி செயலர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.