மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அசுரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கை அமரன் நடிக்கிறார். காரைக்குடியில் அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 9ஆம் தேதி (நாளை) ‘அருண்விஜய் 33’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது. இத்தகவலை நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]