Narendra-Modi
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர்.
பா.ஜ.க. பிரசாரத்தை மேலும் மெருகூட்டும் வகையில் பிரதமர் நரேந்திரமோடியின் ‘வாய்ஸ் மெசேஜ்’ என்ற மென்பொருள் தயார் செய்யப்பட்டு, வாக்காளர்களின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்கள் மூலம் பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாக பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்ததிட்டம் ஏற்கனவே பிகார் தேர்தலில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அசாம் மற்றும் மேற்கு வங்காள வாக்காளர்களிடம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இந்த திட்டம் பிரதமர் நரேந்திரமோடியின் நேரடி பிரசாரத்திற்கு சில தினங்களுக்கு முன் ஆரம்பித்து அவரது பிரசாரத்திற்கு பின்னும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்ற தேர்தல் பிரசார உத்தியை தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் மேற்கொள்ளும் இந்த பிரசாரத்தில் வாக்காளர்களின் பெயர்களை அழைத்து பிரசாரம் மேற்கொள்வது நவீன முறையாகும்.