பொது மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக் கூறி மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் வாக்கு சேகரித்தார்.
சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அந்தத் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யாநகர், அண்ணாநகர், எஸ்.கே.பி.புரம், திருவள்ளுவர் சாலை, மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு, ராணி மெய்யம்மை டவர்ஸ், எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். இந்தப் பிரசாரத்தின்போது தென் சென்னை மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், மயிலாப்பூர் அதிமுக பகுதிச் செயலாளர் டி.ஜெயச்சந்திரன், வட்டச் செயலாளர் எம்.பார்த்தசாரதி, வெ.ஜெகதீஷ், ஏ.சி.ரங்கசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.