
சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி.
இந்நிலையில் கபாலி படத்தின் டீசர், யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சுமார் ஒரு நிமிஷம் ஓடும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கபாலி படத்தின் டீசர் :
Patrikai.com official YouTube Channel