
409 எம்.பி.க்கள், 1300-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என 14 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என கொங்குநாடு ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பல்லடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இரண்டு ஆண்டு காலமாக இந்தியாவை ஆண்டு வரும் நரேந்திரமோடி அவர்கள்,குஜராத் முதலமைச்சராக இருந்தபோது,குஜராத்தை கடன் இல்லாத மாநிலமாக ஆட்சி செய்தார்.
இன்று இந்தியாவின் பொருளாதார நிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.உள்நாட்டு வாணிபம் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.இரண்டு எம்.பிக்களோடு பாராளுமன்றத்தில் நுழைந்த பாரதிய ஜனதா கட்சி இன்று 409 எம்.பி.க்கள்,1300-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என 14 மாநிலங்களை ஆண்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் தமிழ்நாட்டின் கடன்களை தீர்க்க முடியும்.தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கையை தயார் செய்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே.மற்ற கட்சிகள் எல்லாம் ஓட்டுக்காக நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை மூலமாக பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள். இவ்வாறு பேசினார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் C.P.ராதாகிருஷ்ணன், வேட்பாளர் தங்கராஜ், காடேஸ்வரி சுப்ரமணியம், கொங்குநாடு ஜனநாயக கட்சியின் (KJK) பல்லடம் சட்டமன்ற பொறுப்பாளர் தமிழ் இளங்கோ அருண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Patrikai.com official YouTube Channel