கலிபோர்னியா:
கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஆடை அணிந்த பெண்களை முழு நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேரை கைவிட அதனை உருவாக்கியவர் முடிவு செய்துள்ளார்.
ஆடை அணிந்த பெண்களை முழு நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேர் கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டது. அதன்பின், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்த சாஃப்ட்வேர் மேம்படுத்தப்பட்டது.
இந்த சாஃப்ட்வேரை உருவாக்கியவர், 10 ஆயிரம் பெண்களை முழு நிர்வாணமாக இந்த சாஃப்ட்வேரில் சேமித்து வைத்துள்ளார்.
ஆடையுடன் இருக்கும் ஆண்களைக் கூட, பெண்களின் அந்தரங்க பாகங்களுடன் சேர்த்து நிர்வாணமாக காட்டும்.
பெண்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்ட இந்த சாஃப்ட்வேர், தனிமனித பாலியல் உரிமைக்கு எதிரானது என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய சாஃப்ட்வேரை கைவிட, அதனை உருவாக்கியவர் முடிவு செய்துள்ளார்.
இதுவரை 5 லட்சம் பேர் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தியிருப்பதால், இதனை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதால், இந்த சாஃப்ட்வேரை நிரந்தரமாக கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.