துபாய்:

துபாயில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, நடன விடுதியில் சிக்கித் தவித்த 4 தமிழக இளம் பெண்களை இந்திய தூதரகம் மீட்டது.


கோவையைச் சேர்ந்த 4 இளம்பெண்களை ஏஜெண்ட் மூலம் துபாய்க்கு வேலைக்கு வேலைக்குச் சென்ற பெண்களை நிறுவன உரிமையாளர்கள் தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

பின்னர் நடன விடுதிகளில் ஆடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து துபாய்க்கான இந்திய தூதர் கூறும்போது, நடன விடுதியில் தள்ளப்பட்ட பெண்களில் ஒருவர், தாங்கள் ஏமாற்றப்பட்ட விசயத்தை வாட்ஸ்அப் மூலம் உறவினருக்கு ஆடியோ மூலம் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் உறவினர் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மூலம் துபாயில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

துபாய் போலீஸார் உதவியுடன் 4 தமிழக பெண்களையும் மீட்டுள்ளோம்.
4 பெண்களையும் ஏமாற்றிய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம் என்றனர்.