கான்பெரா: ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் பயத்துடன் ஆடினார்கள் என்று சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, பலவீனமான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் இருந்த நிலையிலேயே, பல புதிய வீரர்களை வைத்துக்கொண்டு இந்த வெற்றியை இந்திய அணி பெற்றதுதான் இப்போதைய கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்!
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளதாவது, “நிரந்தர கேப்டன் விராத் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியின் 7 முன்னணி வீரர்களும் காயம் காரணமாக வெளியேறினர். இதனால் இந்திய அணி பலவீனமாக இருந்தாலும், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணிலேயே சாய்த்தது சாதாரண ஒன்றல்ல.
ஆஸ்திரேலிய வீரர்கள், முதல் பந்திலிருந்தே மனதில் பயத்துடன் ஆடினார்கள். அதுதான் அவர்களின் தோல்விக்கு வித்திட்டது” என்று சாடியுள்ளார் மைக்கேல் கிளார்க்.