ஆஸ்திரேலியாவில் உள்ள கவுல்பர்ன் நகரில் கடந்த சில நாட்களாக வானத்திலிருந்து சிலந்திப் பூச்சிகள் மில்லியன் கணக்கில் மழையாக பொழிந்த வண்ணமுள்ளன. இது அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

spider_rain

சிலந்திப் பூச்சிகளுடன் மெல்லிய சிலந்தி வலைகளும் மழைபோல பொழியும் இந்த நிகழ்வுக்கு “ஏஞ்சல் மழை” என்று பெயராம். இது குறித்து கருத்து கூறும் ஆராய்ச்சியாளர்கள், இது போன்ற ஏஞ்சல் மழை ஒன்றும் அசாதாரணமானது இல்லை. இதுவும் ஒரு அறிவியல் நிகழ்வுதான். இதற்கு முன்பு பல இடங்களில் இது போல நிகழ்ந்திருக்கின்றது என்று கூறுகின்றனர்.
சிலந்திகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயரும் தன்மை கொண்டவை. இவை உயரமான மரங்களில் கூடுகட்ட முயலும்போது காற்றில் அடித்து வரப்பட்டு பூமியில் விழுகின்றன. இதுதான் சிலந்தி மழையாக நமக்கு காட்சியளிக்கிறது.
ஆனால் இது மக்களுக்கு ஒரு பெருந்தொல்லையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கருத்து கூறுகின்றனர். இயன் வாட்சன் என்பவர் “என்னால் வெளியே போகவே முடியவில்லை போனால் சிலந்தி வலை மேலே வந்து போர்வை மாதிரி விழுகிறது. எனது தாடியெல்லாம் சிலந்திப் பூச்சிகள் ஏறுகின்றன என தனது எரிச்சலை கொட்டியிருக்கிறார்.
இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை கொஞ்சம் சூரிய ஒளி அதிகரித்துவிட்டால் இது தானாக அகன்றுவிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.