கான்பெரா: இலங்கை – ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டி-20 போட்டியின்போது, அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன், திடீரென வாட்டர் பாயாக செயல்பட்டு பலரையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இலங்கை – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியப் பிரதமர் லெவன் அணி – இலங்கை அணி மோதிய பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பார்வையிட வந்திருந்தார்.

இந்நிலையில், திடீரென தனது அணி வீரர்கள் அணியும் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, குளிர்பானப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, மைதானத்திற்குள் இறங்கி வீரர்களுக்கு சப்ளை செய்தார். அவரின் இச்செயல் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது.

பிரதமரின் இந்தச் செயலை சமூகவலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர். இப்போட்டியில் பிரதமர் லெவன் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.