இலங்கை அரசின் கொடூரம் தெரியாமல் அங்கு சென்றுவிட்டேன்: ஆஸ்திரேலிய நகரசபை தலைவர் வருத்தம்

மெல்போர்ன்

ஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் டன்டினோங் நகரசபைத் தலைவராக இருப்பவர் ஜிம் மெமெட்டி. இவர் சமீபத்தில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுவந்தார். பயணத்தின் போது இலங்கையில் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள வர்த்தகர்கள், பிக்குகளை சந்தித்தார்.

பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய ஜிம், மெல்பேர்ண் பகுதியல் வசிக்கும் ஈழ தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். இது அங்குள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்குள்ள தமிழ் ஏதிலிகள் கழகச் செயற்பாட்டாளர்கள் தமது சமூக வலையத்தளத்தில்ஜிம் நிலைப்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினர். மேலும் இலங்கை அரசு மற்றும் படையினரால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள், வவுனியா யோசப் படைமுகாமில் தமிழ்க்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தமிழ்நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டமை மற்றும் படையினரால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து மின்னஞ்சல் மூலமாக ஜிம் அவர்களுக்குஅனுப்பிவைத்திருந்தனர்.

இந்த அறிக்கைகளை முழுமையாக வாசித்தறிந்து கொண்ட ஜிம், இலங்கையில் சமகாலநிலவரங்கள் தொடர்பாக உண்மையான நிலவரங்கைளை புரிந்துகொண்டார். அதையடுத்து ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் (16-06-2017 ) மாலை ஜிம்மை, தமிழ் ஏதிலிகள்கழகத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது ஜிம், “தமிழ் மக்களுக்கு இப்போதும் அநீதிகளும் அக்கிரமங்களும் இலங்கை அரசினால் தொடர்வது தெரிந்திருந்தால், நான் இலங்கை பயணத்தையே தவிர்த்திருப்பேன். எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.


English Summary
Australian municipality chairman admits that he went tp Srilanka without knowing the Srilanka's original face