நிம்பின், ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அம்பால் அடிபட இருந்தவரை மொபைல் காப்பாற்றி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகருக்கு சுமார் 150 கிமீ தெற்கே நிம்பின் என்னும் ஒரு சிறு நகரம் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த நகரில் 43 வயதான நபர் வசித்து வந்தார்.
அவர் தனது வீட்டுக்கு திரும்பும் போது அவருக்கு தெரிந்த மற்றொருவர் வில் மற்றும் அம்புடன் நிற்பதைக் கண்டார். அவர் அம்பு எய்வதை படம் எடுக்க நினைத்த நிம்பின் நகரவாசி தனது மொபைல் மூலம் படம் எடுத்துள்ளார்.
அந்த வில்லாளி நிம்பின் நகர வாசியை நோக்கி அம்பு எய்துள்ளார். அந்த அம்பு மொபைலை துளைத்துள்ளது. மொபைல் அவர் தாடையின் மீது விழுந்துள்ளது. அவருக்கு தாடையில் ஒரு சிறிய வீக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய காவல் துறையினர் அம்பு எய்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்பது போல் தலைக்கு வந்த அம்பு மொபலோடு போச்சு என்னும் புதுமொழி உண்மையாகி உள்ளது.