கான்பெரா, ஆஸ்திரேலியா

ஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ்.    இவரைப் பற்றி பாலியல் சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன.    சில தினக்களுகு முன்பு இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.   அதனால் இவருக்கு ஆளும் கட்சியான தேசிய கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் தேதி ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் இவர் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.     இந்த எதிர்ப்புக்களை அடுத்து ராஜினாமா செய்யப் போவதாக பர்னபி ஜாய்ஸ் அறிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தேசிய கட்சியின் தலைவர் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப்பிரதமர் ஆகிய பதவிகளில் இருந்து திங்கட்கிழமை விலகுகிறேன்.   இதுவரை என்னை ஆதரித்த அனைவருக்கும், குறிப்பாக நியு இங்கிலாந்து  மக்களுக்கு நன்றி” என பதிந்துள்ளார்.

இந்த புகார் வருவதற்கு பர்னபி ஜாய்ஸ் தனது முன்னாள் ஊடக ஆலோசகர் விக்கி கேம்பியனுடன் திருமணமற்ற உறவின் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகப்போவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.