மெல்போர்ன்: கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் குறையாத நிலையில், மொத்தம் 16 அணிகளை வைத்து உலகக்கோப்பை டி-20 தொடரை நடத்துவது எளிதான காரியமல்ல என்றுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் இயர்ல் எட்டிங்ஸ்.
இந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியாவில் டி-20 தொடர் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனாவால் மாறியுள்ள இன்றைய உலக சூழலில், அத்தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
மேலும், இத்தொடரின் சாத்தியத்தன்மை என்ன்ன? என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காமல் யோசனையில் ஆழ்ந்துள்ளது ஐசிசி அமைப்பு.
இந்நிலையில் பேசியுள்ள இயர்ல் எட்டிங்ஸ், “கொரோனா நெருக்கடி இன்னும் பல நாடுகளில் குறையாத நிலையில், மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த அணியினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, தொடரில் பங்கேற்பதென்பது எளிதான காரியமல்ல.
இது நம்ப முடியாத ஒன்றுதான். எனவே, தொடரை நடத்துவது இயலாத காரியம் என்றே நினைக்கிறேன்” என்றுள்ளார் அவர்.