சிட்னி:

ஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பற்றியெரிந்து வரும் காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 480 மில்லியனுக்கும் (அதாவது சுமார் 48 கோடி) அதிகமான வன உயிரினங்கள் பலியாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. சிட்னி பல்கலைக்கழக கல்வியாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில்  கடந்த கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. நியூ சௌத் வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியவரை ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலம் முழுவதும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வெப்ப நிலை அதிகரிக்க இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால், காட்டு தீ மிகவும் எளிதாக பரவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுமார்  சுமார் 5 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு  காட்டுதீயால் எரிந்து நாசமாகி  உள்ளது. இந்த தீயில் சிக்கி, சுமார் 480 மில்லியன் அளவிலான பறவைகள், பாலூட்டிகள் , ஊர்வன உள்பட அரியவகை தாவங்கள் உள்பட ஏராளமான வன உயிரினங்களும், தாவர இனங்களும் அழிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

காட்டுத் தீயால் டஜன் கணக்கான இடங்களில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கடற்கரையோரம் மற்றும் கப்பலில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்படும் என விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீ பற்றி எரியும் பகுதிகள் அருகே இருக்கும் மக்களை வெளியேற நியூ சவூத் வேல்ஸ் பிரிமீயர் கிளாடிஸ் வலியுறுத்தி உள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர், டஜன் கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் தீக்கிரையாகி உள்ளது. ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் புறநகர் பகுதியான கூலாகோலைட் (Coolagolite)  பகுதி காட்டுத்தீயால் சூழப்பட்ட நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி வளர்த்த பல மாடுகள் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில்,   20 மாடுகளை கருணைக்கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அந்த பகுதியில் வாழும் உயிரினங்கள்  பறவைகள் நேரடியாக அல்லது வாழ வழியில்லாமலோ அழிந்து வருகிறது என்றும்,  கோலா வின் எண்ணிக்கையில்  30% அழிக்கப்பட்டுவிட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய சிட்னியின் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் டிக்மேன் தலைமையிலான ஆராய்ச்சியில்  480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றில் பல தீவிபத்துகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வாழ்வாதாரங்களை  இழப்பதன் மூலமோ கொல்லப்பட்டிருக்கும் என்று அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

கடுமையாக எரிந்த பகுதிகளில் தங்குமிடம் இல்லாமை, உணவின் பற்றாக்குறை, ஆக்கிரமிப்புகள், வேட்டையாடு பவர்களின் ஊடுருவல்கள் ஆகியவற்றால் சிவப்பு நரிகள் மற்றும் ஃபெரல் பூனைகள், மற்ற – விலங்குகளின் எண்ணிக்கையை மேலும் கடுமையாக, மறைமுகமாகக் குறைக்க வழிவகுக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது என்று டிக்மேன் விவரித்து உள்ளார்.

தென்கிழக்கு ஆஸ்திரேலியா வழியாக காட்டுத்தீ பரவுவதால் கோலாக்கள் மற்றும் கங்காருக்கள் உட்பட பல விலங்குகள்  இறக்கின்றன , இதனால் ஏராளமான நிலங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்படுகின்றன. தெற்கு பகுதியில்  குளிர்காலம்  தொடங்கியதிலிருந்து மனித இறப்பு எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

இதுகுறித்து கூறிய, மத்திய சுற்றுச்சூழல் மந்திரி சுசன் லே கூறுகையில், பிராந்தியத்தில் 30% கோலாக்கள் இறந்திருக்கலாம், ஏனெனில் “அவர்களின் வாழ்விடங்களில் 30% வரை அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீ சுற்றுசூழலை மிகவும் பாதித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.