அடிலெய்டு: இந்திய அணிக்கெதிரான நீண்ட கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு முன்பாக, வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் நிகழ்வை ஆஸ்திரேலிய அணி மேற்கொள்ளும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அணிக்கு எதிரான ஒவ்வொரு சர்வதேச தொடருக்கு முன்னதாகவும், நிறவெறிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தும் வகையில், வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் செயல்பாட்டை ஆஸ்திரேலிய அணியினர் வரும்காலங்களில் நிகழ்த்துவர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டின் பாரம்பரிய பண்டையக் கலாச்சாரத்தை நினைவுகூறும் வகையில் இது நடத்தப்படும்.
இந்த நிகழ்வு குறித்து துணைக் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று அறிவித்தார். அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட உரையாடல்களின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மைக்கேல் ஹோல்டிங் ஆஸ்திரேலிய அணியை விமர்சித்திருந்தாலும், கடந்த செப்டம்பரில், இங்கிலாந்து அணிக்கெதிராக அந்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா தோற்கவில்லை.
“வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் செயல்பாட்டை நிகழ்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு சர்வதேச தொடருக்கு முன்னதாகவும் இதை செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது எங்களின் ஒரு எளிதான முடிவு.
இதைப்பற்றி நீங்கள் விரைவில் சிறிதளவு புரிந்துகொள்ள முயலலாம். ஒரு விளையாட்டு நடவடிக்கையாக இல்லாமல், நிறவெறிக்கு எதிராக, நாங்கள் எப்போதுமே இருப்பவர்கள் என்பதை வெளிப்படுத்தவும்தான் இது” என்றுள்ளார் கம்மின்ஸ்.