பெங்களூரு

ந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டி 20 முதல் போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் தவான் முதலில்14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

யாவரும் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் ஒரே ரன் மட்டுமே எடுத்தார்.  கோலி – தோனி இணை இந்த போட்டியில் அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தது ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோலி இம்முறை 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். தோனி 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து பேட்டிங்கில் களம் இறங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு 20 ஓவர்களில் 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப் பட்டுள்ளது