மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டைக்கூட இழக்காமல் 156 ரன்களை எளிதாகக் கடந்துள்ளது ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி விரைவாக முன்னேறுகிறது.
இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு வெறும் 256 மட்டுமே. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 27.1 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே தேவை. அதாவது, 163 பந்துகளில் 100 ரன்கள்.
சேஸிங் செய்வதற்கு எளிதான மைதானம் என்று சூழல் இருக்கையில், டாஸில் தோற்றாலும்கூட, முதலில் களமிறங்கிய இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது மற்றும் மோசமாக சொதப்பியது.
இலக்கு 300+ இருந்தாலும் நிலைமை கடினம் என்றபோது 256 என்பது ஒரு விஷயமே அல்ல, அதுவும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கு.
தற்போது அந்த அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஆரோன் ஃபின்ச்சும் ஆடி வருகின்றனர். வார்னர் 76 ரன்களும், ஃபின்ச் 66 ரன்களும் அடித்துள்ளனர். இந்தியாவால் மருந்துக்குக்கூட விக்கெட் எடுக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சு மட்டுமே ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.