இந்தியாவுடனான கலாச்சார உறவுகளை வலுபடுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, “இந்தியக் கலாச்சார சங்கமம் “விழாவிற்கு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் , பத்து வாரக் காலம் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கலைச்சங்கமம் மெல்போர்ன், சிட்னி, பெர்த், கேன்பெர்ரா, அலைஸ் ஸ்பிரிங்க்ஸ், அடிலைட், பிரிஸ்பேன் ஆகிய ஏழு நகரங்களில் நடைபெறவுள்ளது.

டர்ன்புல் கூட்டணி அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் “இந்திய பாரம்பரிய மற்றும் நவீன கலை வடிவங்களை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள இந்தியக் கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிக்கு 250000 ஆஸ்திரேலிய டாலர்களை அரசு நிதியுதவியாய் வழங்கியுள்ளது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களும், ஆஸ்திரேலியக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel