
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உ.பி.முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் யோகி ஆதித்யநாத், சுதந்திர தினத்தன்று உபி மதரசாக்களில் கட்டாயம் தேசியக்கொடி ஏற்றி அதனை போட்டோ வீடியோ பதிவு செய்து அரசுக்கு அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
யோகியின் இந்த உத்தரவு முஸ்லிம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel