சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் , சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆக.15-ம் தேதி (வியாழன்) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.