சென்னை:

மிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களிடம் புகைப்பட வாக்காளர் அட்டை இல்லையென்றால், கீழ்க்காணும் மற்ற அடையாள அட்டைகளை கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

ஆனால், தேர்தல்ஆணையம் கொடுத்துள்ள பூத் சிலிப் வாக்காளர் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்படாது:

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 95 தொகுதிகளக்கு இன்று 2வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள், தங்களது  புகைப்பட அடையாள அட்டை, வாக்காளர் அட்டை இல்லையென்றால் மற்ற 11 வகையான ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

அதன்படி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்),

ஓட்டுநர் உரிமம்,

மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப் பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்,

புகைப்படத்துடன் கூடிய வங்கி,

அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,

வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை,

தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடை யாள அட்டை

மற்றும் ஆதார் கார்டு

ஆகியவற்றை காட்டி வாக்களிக்கலாம்.

இதற்கு முந்தைய தேர்தல் களில் தேர்தல் ஆணையம், புகைப்பட வாக்காளர் சீட்டை அடையாளத்துக்கான ஆவணமாக அனுமதித் திருந்தது. அந்த ஆவணம் வாக்காளர் பட்டியலை இறுதி செய்த பின், தேர்தல் நாளுக்கு சற்று முன்னர் வழங்கப்படுவதால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

ஒரு வேளை ஒரு வாக்காளர் வேறொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத் திருந்தால், அந்த அடையாள அட்டையையும் பயன்படுத்த லாம். ஆனால், அந்த வாக் காளர் பெயர், அவர் இருக்கும் பகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், அடையாள ஆவணம் வைத்திருந்தாலே ஒருவர் தனது வாக்கை செலுத்த முடியாது. அவரது பெயர் சம்பந்தப்பட்ட பகுதி வாக் காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவராவார்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.