ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது.

ஆனந்த் எல்.ராய் இயக்க சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.