கொரோனா ஊரடங்கால், இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நேற்று மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.20 லட்சம் கோடி அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
‘ஆத்மனிர்பார் (“சுயசார்பு பாரதம் – தன்னிறைவு இந்தியா) பாரத்தின் ஐந்து தூண்கள்- பொருளாதாரம், உள்கட்டமைப்பு, புள்ளி விவரங்கள், மனித வளம் மற்றும் தேவை என்று கூறினார்.
தென்னிந்தியாவில் உள்ளவர்கள் AatmanirbharBharat என்றால் என்ன என்று கேட்கிறார்கள்
அவர்களுக்காக நான் நான்கு மொழிகளிலும் சொல்கிறேன், தமிழில் ‘சுயசார்பு பாரதம்’”
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையை தொடங்கினார்
நாட்டின் பல்வேறு துறையோடு ஆலோசனை நடத்திய பிறகு இந்த நிதி தொகுப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலகிற்கும் உதவும் நோக்கில் இந்த திட்டங்கள் இருக்கும்.
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.
உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி அடிப்படையாக தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை நாட்டின் வளர்ச்சியின் தூண்கள்.
இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவும்.
ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தால் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் பாதித்திருப்தை அரசு உணர்ந்துள்ளது.
நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் திட்டம் மூலம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது.
தற்சார்பு இந்தியா என்றால் உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வது அல்ல நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிப்பது.
இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.20 லட்சம் கோடியின் திட்டத்திற்கு பெயர் “தன்னிறைவு இந்தியா”
இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலகிற்கும் உதவும் நோக்கில் திட்டம் இருக்கும் – நிர்மலா சீதாராமன்
தொழில்களை நடத்துவது எளிதாக்கப்படும்
உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது
இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது
பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மறறும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்
மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
தற்சார்பு திட்டம் என்றால் உலகத்தில் இருந்து துண்டித்துக் கொள்வது அல்ல.. தன்னம்பிக்கையை அதிகரிப்பது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.