‘பிகில்’ படத்தின் வெற்றிக்கு பின்னர், பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் அட்லீ. இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கி உள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய , ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தில், நயன்தாராவைத் தொடர்ந்து, ஏற்கனவே பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு தமிழ்நடிகை இணைத்துள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு யாரும் இல்லை, ‘பருத்திவீரன்’ முத்தழகு தான். இவர் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.