‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநரான அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ ‘பிகில்’ என விஜய் வைத்தே மூன்று படங்கள் இயக்கியிருக்கிறார்.
மெர்சல் படத்திற்கு இவருக்கு ரூ.17 கோடி சம்பளம் என்று தகவல் வெளியான நிலையில், ‘பிகில்’ படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில், ஜெயலலிதா வீடு அருகே அட்லீ வீடு ஒன்றை வாங்கியிருக்கிராராம். அந்த வீட்டின் விலை ரூ.20 கோடியாம். மேலும், அந்த வீட்டில் உள்ள தரை தளத்தில் மார்பல் மாற்றுவதற்காக மட்டுமே ரூ.2 கோடி செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.