அட்லாண்டா:
அனைத்து வசதிகளுடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய உலக அளவிலான சிறந்த விளையாட்டரங்கமாக அமெரிக்காவில் உள்ள மெர்சிட்ஸ்-பென்ஸ் விளையாட்டரங்கம் திகழ்கிறது.

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள மெர்சிட்ஸ்-பென்ஜ் விளையாட்டரங்கத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான (எல்இஇடி பிளாட்டினம்) சான்றை பெற்று, தொடர்ந்து உலக அளவில் முதன்மையான விளையாட்டரங்கள் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம் மறுசீரமைப்புக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த விளையாட்டரங்கம் உலக அளவில் அனைத்து வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது.
தண்ணீர் வசதி, விளக்குகள்,எரிசக்தி சேமிப்பு போன்ற முக்கிய அம்சங்களுடன் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த விளையாட்டு அரங்கை உருவாக்கியிருக்கிறார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சூரிய மின் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டுள்ளது.
எல்இடி விளக்குகளை சாதார விளக்குகளை விட 10 மடங்கு பிரகாசமாக உள்ளன. அதேசமயம், 60 சதவீத மின் தேவை மிச்சப்படுத்துகிறது. மழைநீரை மரங்களை வளர்க்க பயன்படுத்துகின்றனர்.
விளையாட்டுப் போட்டி நடக்கும் நாட்களில் 48 மின்சார கார்களுக்கு சார்ஜ் செய்யக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மெர்சிடஸ்-பென்ஸ் விளையாட்டங்கத்தைச் ஒட்டியுள்ள பகுதிகளில் 13 ஏக்கர் அளவுக்கு பூங்காக்கள், கலாச்சார நிகழ்ச்சி நடத்த கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் நடக்காத நாட்களில் மட்டும் இங்கு அனுமதிக்கப்படும்.
இந்த விளையாட்டரங்கம் ஆர்தூர் ப்ளாங்கின் வித்தியாசமான பார்வையில் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக ஜார்னியா மாநிலத்தில் கட்டுமானப் பணிகளில் அனுபவம் பெற்றதுதான் இவரது நிறுவனம்.
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான தலைமைப் பண்பு என்ற உலக அளவிலான (LEED) சான்றை பெற்று, முதன்மை விளையாட்டரங்கமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது மெர்சிட்ஸ்-பென்ஸ் விளையாட்டரங்கம்.
[youtube-feed feed=1]