சென்னை:
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து உள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாலம் என கூறியுள்ளது.
இதுதொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதில், 15 வயதிற்கு குறைவானவர்களும், 50 வயதிற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]