காஞ்சிபுரம்:
தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும், தினசரி 1லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கு வதாகவும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பனிந்திரா ரெட்டி ( Phanindra Reddy.) கூறி உள்ளார்.
அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்க நிதி வழங்கலாம் என தமிழக முதல்வர் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், ஜூலை 1ந்தேதிமுதல் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
தற்போது நின்ற கோலத்தில் அருளாசி வழங்கி வரும் அத்திவரதரை காண தினசரி குறைந்த பட்சம் 1லட்சம் பக்தர்கள் வருகை தரும் நிலையில், தினசரி 1 லட்சம் பேருக்கு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் பல்வேறு வகையான அன்னதானங்கள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பனிந்திரா ரெட்டி “ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு இலவசமாக உணவை விநியோகிக்க நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். கோயிலைச் சுற்றியுள்ள மூன்று முதல் நான்கு தெருக்களில் பிற்பகலில் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது” இதற்கான செலவு பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.
மேலும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதில் ஈடுபட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.