
பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவர்களுள் ஒருவரான வாஜ்பாய் அக்கட்சி சார்பாக முதன்முறையாக பிரதமரானவர் .
கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் என்.பி.உல்லேக் என்பவரால் புத்தகமாக எழுதப்பட்டு வெளியானது.
இந்நிலையில் இந்த புத்தகத்தை திரைப்படமாக உருவாக்கும் உரிமையை பெற்று திரைக்கதை அமைக்கும் பணியை ஷிவ ஷர்மா மற்றுன் சீஷன் அஹமது ஆகியோருக்குச் சொந்தமான அமாஸ் பிலிம்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.
Patrikai.com official YouTube Channel