1
 
பொதுவாகவே, பெண்கள் பூப்படைவது போல, ஆண்களுக்கும்  சுமார் 15 வயதில் விந்தணு உற்பத்தியாக துவங்கும். ஓரிரு ஆண்டுகளில், அதாவது 18வயதை நெருங்கும் போது, நல்ல சக்தியுள்ள வலுமையான விந்து உற்பத்தி ஆகத்துவங்கிவிடும். .
இந்த காலக்கட்டத்தில் உற்பத்தியாகும் விந்தினை சேமித்து வைக்க அறிவுறுத்துகிறார்கள்  ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்.
ஏனென்றால், புகை, மது, எலெக்ட்ரிக் சாதனங்களின் பயன்பாடு, கதிர்வீச்சுகள், உணவுமுறையில் மாற்றம், உணவுப் பொருட்களில் இரசாயன கலப்பு போன்ற காரணங்களால் நாளாவட்டத்தில் ஆண்களின் ஆண்மைத் தன்மை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.  தற்போது உலகளவில் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உள்ளது.  இதனால் பலருக்கு  மனநில பதிப்பு, மன அழுத்தம், பை-போலார் குறைபாடு போன்றவை  ஏற்படுகிறது.
இதனால், “18-24 வயதுடைய ஆண்கள் அவர்களது விந்தணுவை சேமிப்பது அவசியம்.  ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் ஆண்களின் விந்து நல்ல திறனுடன் இருக்கும். பல நாடுகளில் இரத்த வங்கியை போல, விந்தணு சேமிப்பு வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், விந்தணு குறைபாடு உள்ளவர்கள் குழந்தை பேரு அடைய வாய்ப்புகள் ஏற்படுகிறது.
தாமதமாக திருமணம் செய்பவர்களோ அல்லது தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கோ இது நல்ல தீர்வாகும்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.